வடபகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு நாம் எப்போதும் ஒத்துழைப்போம் - கெஹெலிய

Published By: Digital Desk 3

19 Mar, 2021 | 02:03 PM
image

(எம்.நியூட்டன்)

2009 ற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களிற்கு காரணமான அரசியல் காரணங்கள் பற்றி நான் குறிப்பிட விரும்பவில்லை எனத் தெரிவித்த அஞ்சல் சேவைகள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம் என  தெரிவித்தார்.

வட்டுக்கோட்டையில் புதிய தபாலக கட்டிடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

224 வருடங்கள் பழைமை வாய்ந்த தபால் சேவை மக்களின் அவசியமான சேவையாக காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கவலைப்பட்டாலும் 2010 ற்குப் பின்னர் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

2009 ற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களிற்கு காரணமான அரசியல் காரணங்கள் பற்றி நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல்வேறு திட்டங்களை நாம் வடபகுதியில் மேற்கொண்டுள்ளோம்.

சுபிட்சத்தின் நோக்கு என்ற எமது அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் வடபகுதியிலும் பல்வேறு பட்ட அபிவிருத்தி திட்டங்கள் கிராம மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் இடம்பெற்று வருகின்றது.

கொரோனா காலத்திலும் கூட தபால் சேவையானது மிகவும் சிறப்பாக செயற்பட்டது அந்த வைரஸ் தொற்று காலத்திலும் கூட எமது தபால் ஊழியர்கள் தமது கடமையை சிறப்பாக செயற்பட்டு நாட்டில் சேவையாற்றி இருந்தார்கள் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டியுள்ளது.

யாழ்ப்பாண பிரதேசத்தை பொருத்தவரை விவசாயம் ,கல்வி உயர் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளே மிகமுக்கியமான துறையாக காணப்படுகின்றது அத்துடன் அந்த துறைகளை அபிவிருத்தி மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

மேற்குறிப்பிட்ட துறைகளை ஒன்றிணைத்து முன்னோக்கு செல்வதற்கு பெரும் உதவியாக இருப்பது இந்த தபால் துறை என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன். ஒரு இணைப்பு கருவியாகவே நான் தபால் துறையை காண்கிறேன்.நம்மை பொருத்தவரை வடபகுதி அபிவிருத்தி தொடர்பில் எமது அரசாங்கமானது மிகவும் ஆர்வமாக செயற்படுகின்றோம்.

தபால் துறையை நவீனப்படுத்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 224 வருடங்கள் பழமை வாய்ந்த தபால் துறையை நவீனமயப்படுத்தி தபால் துறையுள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செயற்படுத்தல் தொடர்பில் ஆராய்கிறோம்.

உலக நாடுகளில் உள்ள தபால் துறையை போன்று நமது நாட்டிலும் அதிநவீன வசதிகளைக் கொண்ட வகையில் எமது நாட்டின் தபால் துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். வடபகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு வடக்கில் உள்ள எமது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் வடபகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு நாம் எப்போதும் ஒத்துழைப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04