(க.கிஷாந்தன்)

மதுபானம் மற்றும் சிகரட் ஆகியவற்றிற்கு 90 வீதம் பெறுமதி சேர்க்கும் வரியை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து போராட்டம் ஒன்று அட்டன் நோர்வூட் பொயிஸ்டன் தோட்டத்தில் இன்று முன்னேடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் பொயிஸ்டன் தோட்ட பொது மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் ஜனாதிபதி, சுகாதார அமைச்சு வற் வரியை 90 வீதத்தால் அதிகரிப்பதற்காக கடந்த ஒரு வாரங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தமை வரவேற்க்கதக்கது. ஆனால் பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வாழும் தோட்ட தொழிலாளர்கள் இவ் வற் வரியின் ஊடாக பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாக இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

உணவு பொருட்களுக்கான வரியினை குறைத்து மதுபானம் மற்றும் சிகரட் வரிகளை அதிகரிக்கும் படியும் இதனால் எமக்கு எந்தவிதமான ஆட்சபனையும் இல்லை என்றும் இதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இந்த போராட்டம் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.