(எம்.எம்.சில்வெஸ்டர்)
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் தென் ஆபிரிக்க லெஜென்ட்ஸ் அணிக்கெதிராக இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சனத் ஜயசூரிய விளையாடுவது சந்தேகம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டிக்கு இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் லெஜென்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
இப்போட்டியில் பிறையன் லாரா தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியை 12 ஓட்டங்களால் வென்ற சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய லெஜென்ட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
போட்டி ஏற்பாட்டாளர்களால் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்ட திலகரட்ண டில்ஷான் தலைமையிலான இலங்கை லெஜென்ட்ஸ் அணிக்கும், மூன்றாம் இடத்திலுள்ள ஜொன்டி ரோட்ஸ் தலமையிலான தென் ஆபிரிக்க லெஜென்ட்ஸ் அணிக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி ராய்பூரில் இன்று இரவு 7 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணியின் ஜாம்பவான் வீரரான சனத் ஜயசூரிய உபாதைக்குள்ளாகியுள்ளதால் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை அவர், போட்டிக்கு முன்னதாக உபாதயைிலிருந்து மீண்டெழுந்தால் இன்றைய போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM