(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணம் வென்றதன் வெள்ளி விழா நிகழ்வின்போது அர்ஜுன ரணதுங்க முன்வைத்த வேண்டுகோளை செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணம் வென்றதன் 25 ஆண்டுநிறைவு விழாவுக்கான வெள்ளி விழா பிரதமரின் அழைப்பின் பேரில் கடந்த 17 ஆம் திகதியன்றுஅலரி மாளிகையில் நடைபெற்றது.

இலங்கையில் கிரிக்கெட்விளையாட்டின் வீழ்ச்சி குறித்து ஆராய்வதற்கு ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு இலங்கைக்குஉலகக் கிண்ணம் வென்றுகொடுத்த கிரிக்கெட் அணித்தலைவரான அர்ஜுன ரணதுங்க பிரதமர் மஹிந்தராஜபக்சவிடம் வெற்றிவிழா வைபவத்தின் போது வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதாயின், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நடத்தப்பட்டுள்ளவிதம், நடத்தப்படுகின்ற விதம் குறித்து தேடிப்பார்ப்பதுடன், தற்போது சென்று கொண்டிருக்கின்ற முறையைப் போல் இலங்கை கிரிக்கெட் பயணித்தால், எப்போதுமே எமது நாட்டில் கிரிக்கெட்டைஇதை விடவும் மோசமான நிலைக்கு செல்லுமே தவிர நல்ல நிலைக்கு வராது என அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.