தேசிய அர­சாங்­கத்தின் அடுத்த ஆண்­டுக்­கான வரவு செலவு திட்­டத்திற்கு எதிர்ப்பு தெரி­வித்து  இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த அனைத்து தொழிற்­சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மேலும் வங்கியாளர் சங்கம் மாத்திரம் போராட்டத்தை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையினையடுத்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சேவை புறக்கணிப்புக்கு எதிராக வங்கியாளர்  சங்கத்துக்கு மேல் நீதிமன்றம் தமை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.