(செ.தேன்மொழி)
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதியொருவருக்கு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட ஆடைக்குள் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப் பொருளை எடுத்து சென்ற சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு ) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கைதிகளை பார்வையிடுவதற்காக வருகைத்தந்திருந்த உறவினர்களை, சிறைச்சாலையில் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சோதனைச் செய்துள்ளனர்.
இதன்போது கைதியொருவருக்கு வழங்கும் பொருட்டு நபரொருவர் சில ஆடைகளை எடுத்துவந்துள்ளார்.
அந்த ஆடைகளை சோதனைச் செய்துள்ள புலனாய்வு அதிகாரிகள் , அதில் ஆண் காட்சட்டை ஒன்றுக்குள் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து எடுத்துவரப்பட்ட ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது பொலிதீனைக் கொண்டு நன்கு சுருள் வடிவில் பொதிச் செய்யப்பட்டிருந்த , 14 சென்ரி மீட்டர் நீளமான 11 சுருள்களும் , 9 சென்ரி மீட்டர் நீளமான சுருள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சுருள்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து சந்தேக நபரை கைது செய்த புலனாய்வு பிரிவினர் , மேலதிக விசாரணைகளுக்காக அவரை பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM