வவுனியாவில் கஞ்சா பொதிகளுடன் நடமாடிய மூவரை வவுனியா பொலிசார் இன்று கைது செய்துள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு திடீரென்று சென்ற பொலிசார் அங்கு சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டபோது உடமையில் கஞ்சபொதி வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரையும், திருநாவற்குளத்தை சேர்ந்த ஒருவருமாக  மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4600 மில்லிகிராம் கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 19, 23 வயதுடைய இருவரும்,   திருநாவற்குளத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  மேலும் தெரிவித்துள்ளனர்.