(எம்.மனோசித்ரா)
டில்மா தேயிலை நிறுவனத்தின் ஸ்தாபகர் மெர்ரில் ஜே.பெர்னாண்டோவின் இலங்கை தேயிலையின் வரலாறு என்ற தொனிப்பொருளில் ' இலைகளில் ஞானம் (Wisdom in the leaf) ' நூல் வெளியீட்டு விழா நேற்று புதன்கிழமை கொழும்பு 2 இல் அமைந்துள்ள சேம்பர் ஒப் கொமர்ஸ் கட்டடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது இளம் தலைமுறையினரும் தேநீரை அதிகளவில் விரும்புமளவில் தேயிலை உற்பத்தி துறை மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், உற்பத்தியாளர்கள் , விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் கம்பனிகள் என சகலரதும் ஐக்கியத்தினூடாகவே இதனை மேம்படுத்த முடியும் என்றும் நிகழ்வில் கலந்துக்கொண்ட பிரதான பேச்சாளர்கள் பிரஸ்தாபித்தனர்.
இந்நிகழ்வில், பிரபல தேயிலை ஏற்றுமதி நிறுவனங்கள் , முகாமைத்துவ அதிகாரிகள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இரு சுற்றுக்களில் கேள்வியடிப்படையில் ஒரு புத்தகம் ஆகக் கூடியது 5 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
டில்மா நிறுவனத்தினால் தேயிலை தொழிற்துறை சார்ந்த பல்வேறு நலன்புரி திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கமைய ''இலங்கை தேயிலையின் வரலாறு' புத்தகத்தின் மூலம் கிடைக்கப்படும் வருமானமும் இவ்வாறு தேயிலை தொழிற்துறை சார்ந்த பல்வேறு நலன்புரி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
அத்தோடு இதன் மூலமான வருமானத்தின் இருமடங்கு நிதியை டில்மா நிறுவனம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM