(எம்.எம்.சில்வெஸ்டர்)
கொவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தொழில்களை இழந்தோர்கள் குறித்த தரவுகளை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை தொழில் அமைச்சு முன்னெடுத்துள்ளது.
கொவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காலப்பகுதியில் சுயதொழில்களை மேற்கொள்ள முடியாது போனமை, தொழில் தருநர்களால் தொழில்களை இழந்தமை அல்லது கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில் வேறு சிரமங்கள் காரணமாக சுய தொழில்களை இழந்த தனியார் பிரிவுகளில் தொழில் புரிந்தவர்கள் தொடர்பான தகவல்களை தொழிலாளர் திணைக்களத்துக்கு வழங்குமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் இலங்கையில் தனியார்துறை ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளை பெற்று, அதன் மூலமாக முடியுமான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதே பிரதான நோக்கமாகும். அதற்காகவே இந்த தகவல்களையும் தரவுகளையும் பெறவுள்ளோம் என தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொழில்களை இழந்தோர் தமது பெயர், முகவரி, தொலைப்பேசி எண், தொழில் புரிந்த நிறுவனத்தின் முகவரி, சேவையிலிருந்து நீக்கிய திகதி, சேவைக்காலம் மற்றும் கடைசியாக பெற்றுக்கொண்ட அடிப்படை சம்பளம் ஆகிய விபரங்களை தொழிலாளர் திணைக்கள பணிப்பாளர் (தொழிற்துறை விவகாரப் பிரிவு) 11 ஆம் மாடி, ‘மெஹெவர பியச’ கொழும்பு – 05 எனும் முகவரிக்கு அல்லது irlabur456@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு தொழிலாளர் திணைக்கள பணிப்பாளர் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு 0112 368502 எனும் தொலைப்பேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM