logo

” இலங்கை தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்”

Published By: Gayathri

18 Mar, 2021 | 03:17 PM
image

இலங்கை தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது...

''கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற இணையவழி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த மாதமும் அவர்கள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தினர். 

அதன்போது, இலங்கையில் சமத்துவம், சமாதானம், நீதி ஆகியவற்றை விரும்பும் அந்நாட்டு தமிழர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு பிரதமர் மோடி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினார்.  

அந்நாட்டு அரசியலமைப்பின் 13 ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்தி சமரசத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இடையே நடைபெற்ற சந்திப்புகளின்போதும், இலங்கையில் சமரச நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் நீண்டகால ஆதரவு இருப்பதை இந்தியா சார்பில் அமைச்சர் ஜெய்சங்கர் அழுத்தமாக எடுத்துரைத்தார். 

ஒற்றுமையான இலங்கையில் கண்ணியத்தை விரும்பும் தமிழர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமாறும் அவர் வலியுறுத்தினார்' என அமைச்சர் முரளிதரன் பதிலளித்தார்.

இதனிடையே கடந்த ஜனவரி மாதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காண்டாஸ் விமான  ஊழியர்களின் சீருடை விதிகளில்...

2023-06-09 16:43:20
news-image

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள்...

2023-06-09 15:29:54
news-image

ரஷ்ய குடியிருப்புக் கட்டடத்தின் மீது ஆளில்லா...

2023-06-09 13:53:29
news-image

புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான சட்டத்தை...

2023-06-09 12:46:05
news-image

டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 20...

2023-06-09 12:11:52
news-image

விமானத்தின் கதவு இருந்த இடத்தில் மேகம்...

2023-06-09 11:35:50
news-image

ஆப்கான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: 11 பேர்...

2023-06-09 11:03:04
news-image

வீடியோ கேம்ஸ் மூலம் வளரிளம் பருவத்தினர்...

2023-06-09 10:43:28
news-image

டிரம்பின் ஜனாதிபதி கனவிற்கு மீண்டும் ஆபத்து...

2023-06-09 06:14:31
news-image

பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 22...

2023-06-08 20:25:24
news-image

இந்தியா - இலங்கைக்கிடையிலான கப்பல் போக்குவரத்து...

2023-06-08 19:57:05
news-image

சத்திரசிகிச்சையின் பின் சிறந்த நிலையில் பாப்பரசர்:...

2023-06-08 17:18:43