யாழ்பாணம் கிழாலி பிரதேசத்தில் கன்னிவெடியொன்று வெடித்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளாரென யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிழாலி பகுதியில் கன்னிவெடிகள் அகற்றப்படாத பிரதேசத்திற்குள் நபர் பிரவேசித்ததால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 39 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடந்த சனிக்கிழமையன்று (13) காணமல் போயுள்ளார்.

இதனையடுத்து நபரின் குடும்பத்தார்  கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.