(க.கிஷாந்தன்)
பதுளை ஹலிஎல மற்றும் கொட்டியாகொல ஆகியத் தோட்டங்களில்  குளவிக் கொட்டுக்குள்ளான 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை ஹாலிஎல பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்த 6 பெண் தொழிலாளர்கள் உள்ளடங்களாக 10 தொழிலாளர்கள், நேற்று குளவிக் கொட்டுக்குள்ளான நிலையில்  பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இதேவேளை, பதுளை கொட்டியாகல தோட்டத்தில் குளவிக்கொட்டுக்குள்ளான இரண்டு பெண்களும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.