நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 537ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இறுதியாக 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி,மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

பொல்கஸ்ஓவிட்ட பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

ஆண்டிகம பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இன்று புதன்கிழமை இரவு 9  மணி வரை 182 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 88 706 ஆக அதிகரித்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 85 725 பேர் குணமடைந்துள்ளதோடு , 2447 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இது வரையில் 7 96 792 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்ப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று செவ்வாய்கிழமை மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகின. நேற்றையதினம், கண்டியை சேர்ந்த 75 வயதுடைய பெண்ணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் கடந்த 15 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பை சேர்ந்த 59 வயதுடைய ஆணொருவர் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி மருத்துவமனையில் கடந்த 16 ஆம் திகதி கொவிட் நிமோனியா, உயர் இரத்த அழுத்தம், தீவிர நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.