மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலிக்கு பயங்கரவாத தடைச்சட்டத்துக்கமைய அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவத்தின் காரணமாகவே இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என தொலைநோக்கு கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாட்டின் பொதுச்சட்டத்துக்கு அடிபணிய வேண்டிய தேவை கிடையாது என மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலி குறிப்பிட்டுள்ள கருத்து இனங்களுக்கு மத்தியில் வெறுப்புக்களை தூண்டிவிடுவதாகவும், பொது சட்டத்தை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது.

அடிப்படைவாதம், மற்றும் இனவாத கருத்துக்களுக்கள் தொடர்பில் அலட்சியமாக செயற்பட முடியாது. நாட்டில் எதிர்காலத்தில் அடிப்படைவாத சம்பவங்கள் தோற்றம் பெறாத அளவிற்கு பலமான செயற்பாடுகள் இனி முன்னெடுக்கப்படும்.

 ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  அறிக்கையின் பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று ( 17.03.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.