யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளை விநியோகித்து வந்த முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரை மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுழிபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முச்சக்கர வண்டிச் சாரதியே யாழ்ப்பாணம் நகரில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 2 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் பல இடங்களுக்கும் கஞ்சா போதைப்பொருளை விநியோகிப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.