வெளிவிவகார அமைச்சர் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகருடன் கொழும்பில் சந்திப்பு

Published By: Vishnu

17 Mar, 2021 | 03:21 PM
image

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மத் சாத் கட்டாக்கை குடியரசுக் கட்டிடத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பிரதமர் இம்ரான் கான் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தமையைத் தொடர்ந்து இருதரப்பு உறவை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

பாகிஸ்தான் நன்கொடையாக வழங்கிய நடமாடும் நூலகங்களை அமைத்தல் மற்றும் இலங்கை மாணவர்களுக்கு மேலதிகமான நூறு மருத்துவ புலமைப்பரிசில்களை வழங்குதல் உள்ளிட்ட பிரதமர் இம்ரான் கானின் விஜயத்தின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இலங்கையர்களுக்காக பௌத்த யாத்ரீக இடங்களைத் திறப்பதற்கான பாகிஸ்தானின் சலுகையை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, பாகிஸ்தான் இலங்கைத் துறை பிரயாண சலுகைகளை இலங்கை சுற்றுலாவுடன் சேர்ந்து விமானத் துறை விரைவில் அறிவிக்கும் எனத் தெரிவித்தார். நன்கு பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பௌத்த தலங்களின் பன்முகத்தன்மையைக் காண்பதற்காக பாகிஸ்தானுக்கு பரிச்சயமான விஜயங்களை மேற்கொள்ளுமாறு பௌத்த பிக்குகள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வியியலாளர்களுக்கு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார்.

மார்ச் 23 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் பாகிஸ்தான் தேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் குணவர்தனவுக்கு உயர் ஸ்தானிகர் கட்டாக் இதன்போது வெளிவிகார அமைச்சரிடம் அழைப்பு விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18