(க.கிஷாந்தன்)

சிவனொளிபாதமலை காட்டுப்பகுதியில் மரை ஒன்றை வேட்டையாடி அதனை இறைச்சியாக்கி தன்வசம் 30 கிலோ இறைச்சியை வைத்திருந்த 3 சந்தேக நபர்கள் நேற்றிரவு மஸ்கெலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டத்தின் போட்மோர் பிரிவை சேர்ந்தவர்களாவர்.

இவர்களை பொலிஸ் விசாரணையின் பின் அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜரப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை வேட்டையாடப்பட்ட மரை தொடர்பாக அதன் இறைச்சி பகுதிகளை கால்நடை சுகாதார பிரிவின் வைத்திய பரிசோதனைக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை இது தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்களை தேடி வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்ததோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.