பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தி வந்த இந்த கொரோனா நோயாளர்கள், தீ வெளியேற்றத்தைத் தூண்டிய பின்னர் உயிரிழந்தனர் என்று வைத்தியசாலயின் பணிப்பாளர் நஸ்முல் ஹக் கூறினார்.

தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று தீயணைப்பு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்சமயம் வரை பங்களாதேஷில் 560,887 கொரோனா நோயாளர்களும் அதனால் 8,597 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் புதிய பரவலை சமாளிக்க வைத்தியசாலைகள் போராடி வருகின்றன.