- தாஷி சம்துப் -
“1959ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மார்ச் 10ஆம் திகதியும் நினைவு கூரல் நிகழ்வு நடைபெறுகின்றது. தற்போது வரையில் சீனா கம்மினியுஸ்ட் கட்சியின் சிறுபான்மை இன மற்றும் மதக்குழுக்களுக்கு எதிராக கொள்கை மாறவில்லை”
மக்கள் சீனக் குடியரசின் படையெடுப்பிற்கு எதிராக 1959 முன்னெடுக்கப்பட்ட எழுச்சியை உலகெங்கிலும் உள்ள திபெத்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10 அன்று ‘திபெத்திய எழுச்சி’ தினத்தை நினைவு கூருகின்றனர்.
அன்றிலிருந்து, அவரது புனிதத்தன்மை தலாய்லாமா உட்பட பல திபெத்தியர்கள் இந்தியாவில் அடைக்கலம் தேட வேண்டியிருந்தது. இந்தியாவின் தாஷி சம்துப், மத்திய திபெத்திய நிர்வாகம் (சி.டி.ஏ) என்று அழைக்கப்படும் நாடு கடத்தப்பட்ட அரசாங்கம் ஏப்ரல் 28,1959 இல் நிறுவப்பட்டது.
அன்றிலிருந்து திபெத்தியர்களுக்கு எதிரான சீனவின் அட்டூழியங்கள் இடைவிடாமல் தொடர்கின்றன. மதத்தினை பின்பற்றுதல், மனித கௌரவத்திற்கான அடிப்படை மரியாதை, திபெத்திய மொழியைப் பயன்படுத்துதல் மற்றும் திபெத்திய கலாசார அடையாளத்தை பாதுகாத்தல் ஆகியவற்றை இலக்கு வைத்து சீனா செயற்படுகின்றது.
சின்ஜியாங்கில் உள்ள முஸ்லிம் பெண்களைப் போலவே, திபெத்திய லே பௌத்த மத பெண்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் மறுமலர்ச்சி முகாம்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது வழக்கமாக காணப்படுகின்றது.
அத்துடன் கலாசார அடையாளங்கள், மத குழுக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான சீன கம்னியுஸ்ட் கட்சியின் கொள்கையின் வழக்கமான கொடூரத்தைக் காட்டுவதோடு திபெத்தில் கலாசாரப் புரட்சியின் கொடூரங்கள் இன்னும் முடிவடையவில்லை என்பது போல் தெரிகிறது. ஆனால் திபெத்தியர்கள் சும்மா இருக்கவில்லை. மரியாதை மற்றும் சுதந்திரத்தை கோருவதற்காக பல குழுக்களை உருவாக்கியுள்ளனர். சில குழுக்கள் சர்வதேச அளவில் மிகவும் பயனுள்ளவை என்று அறியப்படுகின்றன.
இந்தியாவின் தரம்ஷாலாவில் அக்டோபர் 7, 1970 இல் நிறுவப்பட்ட திபெத்திய இளைஞர் காங்கிரஸ் (டி.வை.சி), திபெத்தின் சுதந்திரத்தை ஆதரிக்கும் ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பாகும்.
இந்த குழு திபெத்திய எழுச்சி தினத்தை ஊக்குவிப்பதிலும், சுதந்திர திபெத்துக்காக வாதிடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பு, இளம் திபெத்தியர்கள் தங்கள் நிலத்தின் அடையாளம் மற்றும் சுதந்திரத்திற்காக உயர ஊக்கமளித்து வருகிறது.
2008 ஆம் ஆண்டில், திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் திபெத்தியர்கள் நடத்திய போராட்டங்கள் உலகின் கவனத்திற்கு வந்ததும், சீன அரசாங்கம் அங்கு மனித உரிமைகள் குறித்து பல கேள்விகளை எதிர்கொள்ள நேர்ந்தது. அத்தோடு, 2008 கோடைகால ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தின்போது பல நாடுகளின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட‘சுதந்திர திபெத்துக்கான மாணவர்கள்’ (எஸ்.எப்.டி), மனித உரிமைகள் மற்றும் திபெத்திய மக்களின் சுதந்திரத்திற்காக உழைக்கும் மாணவர்கள் மற்றும் திபெத்துக்கான ஆர்வலர்களின் உலகளாவிய வலையமைப்பு என்பன உள்ளன.
இவை பல்வேறு நாடுகளில் திபெத்திய எழுச்சி நாள் போராட்டங்களை அடிக்கடி அமைத்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 13 அன்று திபெத்திய சுதந்திர தினத்தின் முக்கிய அமைப்பாளர்களாக சுதந்திர திபெத்துக்கான மாணவர்களின் உள்ளுர் அங்கத்துவ தரப்புக்கள் உள்ளன.
திபெத்தில் பெண்கள் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராடுவதாக திபெத்திய பெண்களும் சபதம் செய்துள்ளனர். திபெத்தில் ஒரு செல்வாக்கு மிக்க பெண்கள் குழுவாக ‘திபெத்திய பெண்கள் சங்கம’ (ரி.டபிள்யூ.ஏ) 10 ஆம் திகி செப்டம்பர் 1984 அன்று இந்தியாவில் உருவாக்கப்பட்டது.
இந்த குழுக்களை பெய்ஜிங் கண்டித்துள்ளது, இக்குழுக்களை “பயங்கரவாதம்" என்று பொய்யாக குற்றம் சாட்டுகிறது. இவ்வாறான குழுக்கள் அமைதியாக செயற்பட்டாலும்கூட அவற்றை ‘பயங்கரவாதம்’ என்று சீனா குறிப்பிடுவதானது தனது ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கு அது சீன கம்னியுஸ்ட் கட்சி வழங்கும் நிலையான முத்திரையாகும்.
சமீபத்தில், தர்மஷாலாவில் நடைபெற்ற பெரியதோரு கூட்டத்தில் உரையாற்றிய, மத்திய திபெத்திய நிர்வாகத்தின் சிக்யோங் (அதாவது ஜனாதிபதி), லிப்சாங் சங்கே, “திபெத்திய சுதந்திரப் போராட்டத்தின் தலைமை இப்போது திபெத்துக்குள்ளும் நாடுகடத்தப்பட்ட புதிய தலைமுறை திபெத்தியர்களுக்கும் சென்று கொண்டிருக்கிறது” என்று கூறினார்.
“திபெத்திய இளைய தலைமுறையினர், அவர்களுக்கான அடையாளம், சுதந்திரம் மற்றும் ஒற்றுமையை தெளிவாகவும் சத்தமாகவும் கோருகிறார்கள். நாடுகடத்தப்பட்ட புதிய தலைமுறை திபெத்தியர்களும் இதேபோன்ற முயற்சிகளில் அதிகளவில் பங்கேற்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் போராட்டத்தை வலுப்படுத்தவும் தக்கவைக்கவும் ஒரு நீண்டகால மூலோபாயம் அவசியமாகும் என்றும் திபெத்தியர்கள் உலகில், சிந்தனையிலும் செயலிலும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், திபெத்திய சுதந்திர இயக்கம் தொடர வலுவான அடித்தளங்களை பாதுகாப்பதற்கு நவீன கல்வியை பாரம்பரிய விழுமியங்களுடன் இணைப்பது முக்கியத்துவம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, பல புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளபடி, சீனா, திபெத் மீது கொண்டுள்ள கொள்கையின் தோல்வி அதன் சொந்த உருவத்தை புண்படுத்துவதாக இருக்கும் என்று தலாய் லாமா பரிந்துரைத்திருந்தார்.
அவர் “கம்யூனிஸ்டுகளின் மூளைச் சலவை, சித்திரவதை, இலஞ்சம், கொலை, என்று தொடர்ந்தாலும் ‘திபெத்தின் ஆன்மா’ உடைக்கப்படவில்லை. திபெத்திய மக்களின் உறுதிப்பாடு மிகவும் வலுவானது, எனவே எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்க பல காரணங்கள் உள்ளன? என்றும் அவர் குறிப்பிட்டார்.
1959 எழுச்சி நடைபெற்று 62 ஆண்டுகளுக்குப் பிறகு, திபெத்தில் மனித உரிமை மீறல்களை சீனா மேற்கொள்வகிறது. ஆகவே திபெத்தியர்களின் கலாசார அடையாளம் மற்றும் மத சுதந்திரத்திற்கான முழு மரியாதையை மீட்டெடுக்க வேண்டிய நேரம் தற்போது ஏற்பட்டுள்ளது. சீனாவின் செயற்பாடுகளை உலகம் முழுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
தாஷி சம்துப் : இந்தியாவின் திபெத்திய பிராந்திய இளைஞர் காங்கிரசின் முன்னாள் செயலாளரும் இத்தாலியில் உள்ள திபெத்திய சமூகத்தின் ஆலோசகரும் முன்னாள் செயலாளருமாவார்.
தமிழில்:- ஆர்.ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM