(எம்.மனோசித்ரா)

சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களில் தெரிவு செய்யப்பட்ட இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் வீடும் வியாபார நிலையமும் அமைக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

வருமானத்திற்காக மளிகை கடை ஆரம்பித்த தமிழ் திரைப்பட இயக்குனர்! -  lifeberrys.com Tamil இந்தி

உணவு விநியோக வலையமைப்பை விரிவாக்குவதற்காக சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களில் தெரிவு செய்யப்ட்ட இளம் பெண் தொழில் முயற்சியாளர்கள் 25,000 பேரை இலக்காகக் கொண்டு அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் வீடும் வியாபார நிலையமும் அமைக்கும் வேலைத்திட்டத்தை ஏனைய நிரல் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களையும் இணைத்து மேற்கொள்வதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்திற்கு தேசிய ரீதியான வழிகாட்டல் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமையொழிப்புக்கான செயலணி மூலமும், வேலைத்திட்ட நடவடிக்கைகள் சமுர்த்தி, வீட்டுப் பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில் மறறும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் இந்நிகழ்ச்சித்திட்டம் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 100,000 கிலோமீற்றர் வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.

100,000 கிலோமீற்றர் வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் வீதிகளுடன் இணைந்து முன்மொழியப்பட்டுள்ள வீடும் வியாபார நிலையம் அமைக்கப்படவுள்ளதுடன், குறித்த வீடும் வியாபார நிலையமும் தேவைக்கேற்ப 200, 300, 400 மற்றும் 500 சதுர அடிகளில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, குறித்த நிகழ்ச்ச்pத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.