சமூக வலைதளங்களில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக பொலிவூட் சூப்பர் நடிகரான அமீர்கான் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளார். 

சமூக வலைதளங்களில் இருப்பதை விட தனது வேலைகளில் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அமீர்கான் தனது 55 ஆவது பிறந்தநாளை மார்ச் 14 ஆம் திகதி கொண்டாடினார். தனக்க பிறந்த நாள் வாழ்த்து கூறிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அமீர்கான், அத்துடன் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதையும் அறிவித்துள்ளார்.

 சமூக வலைதளங்களில் தனது கடைசி பதிவு இது தான் என குறிப்பிட்ட அமீர்கான், விரைவில் தான் அதிகாரப்பூர்வமாக ஒரு சேனல் ஆரம்பிக்க போவதாகவும், அதை தன்னை பற்றியும், தனது படங்கள் பற்றியும் அப்டேட்களை இனி தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் இதற்கு முன் ரசிகர்களை எப்படி தொடர்பு கொண்டேனோ அதே போல் இனியும் தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார். அமிர் கான், கரீனா கபூருடன் இணைந்து லால் சிங் சாத்தா என்ற காமெடி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மனோ சிங் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படம் ஹொலிவூட் பிளாக்பஸ்டர் படமான பாரெஸ்ட் கம்ப் என்ற படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.