புர்கா விடயத்தில் அரசாங்கம் விரைவாக முடிவுகளை எடுக்காது - கெஹெலிய

Published By: Vishnu

16 Mar, 2021 | 11:34 AM
image

புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடைசெய்யும் தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் விரைவாக முடிவுகளை மேற்கொள்ளாது என அமைச்சரும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு முன்மொழியப்பட்டுள்ள புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றுக்கு தடை விதிக்கும் தீர்மானம் தொடர்பல் எந்த முடிவும் விரைவாக எடுக்கப்பட மாட்டாது.

தற்சமயம் அந்த விடயம் பரிசீலனையில் உள்ளது. எவ்வாறெனினும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று, அனைவரது ஒருமித்த கருத்துக்களின் பின்னரே அது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதேநேரம் புர்கா அணிவதற்கு தடை விதிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் கையொப்பமிட்ட அமைச்சரவை பத்திரமும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ  நாட்டை விட்டு தப்பிச்...

2026-09-16 17:44:55
news-image

புகையிரத பொது முகாமையாளரை பதவி விலகக்...

2026-09-16 23:26:17
news-image

புதிய சீனத் தூதுவர் வீ ஹுவாஷியாங்...

2026-09-16 22:09:21
news-image

ராஜபக்‌ஷ குடும்பத்தை இம்ரான் கான் அல்லது...

2026-09-16 16:49:17
news-image

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நெருக்கடி: மருந்து...

2026-09-16 16:22:25
news-image

இலங்கையை பிராந்திய நிதித் தொழில்நுட்ப மையமாக...

2026-09-16 16:46:15
news-image

மட்டக்குளி பகுதியில் கோர விபத்து –...

2026-09-16 22:07:10
news-image

மாணவர் குறைவான கிராமப்புற பாடசாலைகளை மூட...

2026-09-16 16:48:05
news-image

“சிரிலிய சவிய” நிதி மோசடி வழக்கு...

2026-09-16 19:27:20
news-image

தமிழ் பேசும் சமூகங்கள் நாட்டின் அரசியலை...

2026-09-16 20:29:10
news-image

நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல்: செயற்கை...

2026-09-16 14:02:12
news-image

மன்னார் வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியுடன் அவசர...

2026-09-16 19:10:32