போரின் போது வடக்குக்கிழக்கு பகுதிகளில் காணமல்  போன ஆயிரக்கணக்கான பொலிஸார்  மற்றும் படைவீரர்களை கண்டறிய காணமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் உதவும் என நம்புவதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையானது, வரவேற்கத்தக்கதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போரின் போது சரணடைந்த விடுதலைப்புலிகள் விடுவிக்கப்பட்ட போது கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் ஆணையிறவு முகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான  படையினர் காணாமல் போயுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் விடுதலைப்புலிகளிடம் விசாரணை செய்யவும், காணமல் போன படையினர் நிலை தொடர்பிலும் கண்டறிய குறித்த அலுவலகம் உதவும் என அவர் தெரிவித்தார்.