மன சிதைவு நோயிலிருந்து மீட்க உதவும் ஏரோபிக்

Published By: Robert

15 Aug, 2016 | 10:03 AM
image

மன சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் மேற்கொண்டு வரும் சிகிச்சை முறைகளுடன் ஏரோபிக் உடற்பயிற்சியையும் இணைந்து வழங்கினால் அவர்களை அந்த நோயின் பாதிப்பிலிருந்து மீட்கலாம் என்று மான்செஸ்டர் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டறிதிருக்கிறார்கள்.

எம்மில் பலருக்கும் தற்போது மன சிதைவு நோயின் பாதிப்பிற்கு ஆளாகிறோம். ஆனால் அதனை யாரும் உணர்ந்துகொள்வதில்லை. ஏனெனில் இதற்கான அறிகுறிகள் பற்றி பொதுமக்கள் அறிந்திருவைத்திருப்பதில்லை. இந்நிலையில் மனச்சிதைவு நோய் என்பது ஒரு கடுமையான மனநோயாகவே கருதப்படுகிறது. காரணம், மனச்சிதைவு நோயாளர்களின் சிந்தனை முறை கடுமையான முறையில் பாதிக்கப்படுகின்றது. அவர்களின் சிந்தனை முறையில் மற்றும் உணர்வு முறையில் ஏற்படும் மாற்றங்கள் தான், சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத நடத்தை முறைகளாக மனச்சிதைவு நோயாளர்களிடம் வெளிப்படுகிறது.

தர்க்கரீதியற்ற சிந்தனைகள், விநோதமான உணர்வுகள், பிறழ்வு நம்பிக்கைகள், மாயக்குரல்கள் மற்றும் மாயக்காட்சிகள், நாளாந்தம் நடைபெறும் அவர்களின் இயக்கங்களில் ஏற்படும் தடைகள் ஆகியவையே இதன் அறிகுறிகளாகும்.

குழுவழிச் சிகிச்சை, குடும்பவழிச்சிகிச்சை, நடத்தை மாற்றுச் சிகிச்சை, சிந்தனை முறை மாற்றுச்சிகிச்சை, கலைவழிச் சிகிச்சை, நாடகவழிச்சிகிச்சை, தொழில் வழிச் சிகிச்சை என பல மனநலம் சார்ந்த சிகிச்சைகளை தொடர்ந்து வழங்கிவரவேண்டும்.

மேற்சொன்ன சிகிச்சைகளுடன் இணைந்து இவர்களுக்கு 12 வாரங்களுக்கு முறையான ஏரோபிக் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தால் இவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைப்பதாக இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். இவ்விதமான கூட்டு சிகிச்சையை அக்கறையுடனும், அரவணைப்புடனும் அளித்தால் இவர்கள் மனசிதைவு நோயிலிருந்து மீளுவார்கள்.

டொக்டர் ராஜ்மோகன் M.D.,

மனநல நிபுணர்,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14
news-image

யூஸ்டாச்சியன் குழாய் செயலிழப்பு எனும் காதில்...

2025-01-30 14:26:30
news-image

தழும்புகளில் ஏற்படும் வலிக்கான நிவாரண சிகிச்சை

2025-01-29 20:45:31
news-image

செர்வியோஜெனிக் தலைவலி பாதிப்புக்கான சிகிச்சை 

2025-01-27 19:26:02
news-image

மெரால்ஜியா பரேஸ்டெடிகா எனும் தொடை பகுதியில்...

2025-01-25 16:23:10
news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52