ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் மற்றும் மக்கள் வங்கி ஒன்றாக இணைந்து ஆயுள் மற்றும் வாகன காப்புறுதித் தவணைகளை மக்கள் வங்கியின் பணம் வைப்பிலிடும் இயந்திரம் ஊடாக மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை ஒழுங்கமைத்துள்ளது. 

இதனை நாடு பூராகவும் அமைந்துள்ள 244 இயந்திரங்கள் ஊடாக மேற்கொள்ள முடிவதோடு இதன்மூலம் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் ஆயுள் மற்றும் மோட்டார் வாகன காப்புறுதி உரிமையாளர்களுக்கு தவணைக் கொடுப்பனவுகளை இலகுவாக மற்றும் வேகமாக மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

இதனை உத்தியோகப்பூர்வ அறிமுகம் செய்துவைக்கும் நிகழ்வு 2021 மார்ச் 3ஆம் திகதி மக்கள் வங்கியின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றதோடு இந்நிகழ்வுக்காக ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸின் தலைவர் ஜகத் வெல்லவத்த மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ ஆகியோர் உட்பட நிறுவனங்களது உயர் முகாமைத்துவ குழாமினரும் கலந்துகொண்டனர்.

 

மக்கள் வங்கியின் பணம் வைப்பிலிடும் இயந்திரம் ஊடாக ஆயுள் காப்புறுதி தவணைக் கொடுப்பனவை ஆயுள் காப்புறுதி உரிம இலக்கத்தை உட்செலுத்துவதன் ஊடாக மேற்கொள்ள முடியும். 

மோட்டார் வாகன காப்புறுதி செலுத்தலின்போது ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் வாடிக்கையாளர் பிரிவிற்கு பிரவேசிப்பதன் ஊடாக அல்லது ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் வாடிக்கையாளர் இலக்கத்தை அழைப்பதன் மூலம் பெற்றுக்கொண்ட விசேட இலக்கத்தை உட்செலுத்துவதன் ஊடாக மேற்கொள்ள முடியும். 

எதிர்வரும் நாட்களில் இவ்விலக்கமானது தவணையை செலுத்துவதற்கான நினைவு கூரலின் போது மற்றும் ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் கையடக்க தொலைபேசியுடனான குறுஞ்செய்தியின் போது உள்ளடக்கப்பட்டிருக்கும்.

ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் புதிய தொழில்நுட்பங்களின் ஊடாக சிறந்த வாடிக்கையாளர் சேவையைப் பெற்றுத்தருவதற்காக எப்பொழுதும் முயற்சி செய்வதோடு அதன் அங்கமாக வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதி எனப்படும் எண்ணக்கருவை அறிமுகப்படுத்தி புதிய தொழில்நுடபத்தின் ஊடாக அவர்களை நிறுவனத்தின் ஊடான தொடர்பினை அதிகரிக்கச் செய்கின்றது.