பொலிஸ் காவலில் தற்சமயம் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சந்தேக நபர் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுவிற்கு நிதியளித்திருப்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பாணந்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் சில மாதங்களுக்கு முன்னர் பேலியகொட பொலிஸாரால் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளின்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அதிகளவான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, சந்தேக நபர் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவதத்த‍ை ஊக்குவிக்கும் ஒரு குழுவுக்கு நிதியளித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையில் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக டி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.