தவறுகள் திருத்தப்படாமல் சர்வதேச அரசியலில் வெற்றியே இல்லை

Published By: Gayathri

15 Mar, 2021 | 01:03 PM
image

சி.அ.யோதிலிங்கம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் முடிவுக்கு வரும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. 

பிரித்தானிய தலைமையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும்போது, பிரித்தானியா சார்பு நாடுகளுக்கு வெற்றி கிடைக்கலாம்.

ஆனால், தமிழ் மக்களுக்கு பெரிதாக எதுவும் கிடைக்கப்போவதில்லை. இங்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திற்கும் இந்தியாவிற்கும் தமிழ் மக்களின் விவகாரம் கறிவேப்பிலை நிலையில்தான் இன்றும் இருக்கின்றது. 

அவற்றிற்கு தமது பூகோள அரசியல் நலன்தான் முக்கியம். தமிழ் மக்களின் விவகாரம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். 

கறிவேப்பிலையை எறியத்தான் வேண்டும் என்பதில்லை. சம்பலாகவும் சாப்பிடலாம். தமிழ்த்தரப்பு கவனமாக இருந்திருந்தால் பூகோள அரசியல் மைதானத்தில் கௌரவமான இடத்ததைப் பெற்றிருக்க முடியும். 

இங்கு பிரேரணையின் நோக்கம் அமெரிக்கா-மேற்குலக- இந்தியக் கூட்டின் பூகோள அரசியல் நலன்களுக்கேற்ப இலங்கைத் தீவைக் கொண்டுவருவதுதான். 

அதற்கு ஒரு கால அவகாசம் அவற்றிற்கு தேவையாக உள்ளது. பிரேரணையின் மைய இலக்கும் இதுதான். 

அதற்கேற்ற வகையில் தமிழர் விவகாரத்தையும், போர்க்குற்ற விவகாரத்தையும் சற்று பின்னுக்குத் தள்ளி முழு இலங்கைக்குமான மனிதவுரிமை விவகாரம் முன்னே கொண்டுவரப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர் அதனைத் தெளிவாகவே கூறினார். 

“போர்க்குற்ற விவகாரங்கள் பிரேரணையில் இல்லை. இருப்பதெல்லாம் முழு இலங்கைக்குமான மனித உரிமை விவகாரங்களே” என்பது தான் அந்தக் கூற்றாகும்.

பிரேரணையில் தமிழ் மக்களுக்கு சார்பான விடயங்கள் இரண்டுதான் உள்ளன.  ஒன்று போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறல் குற்றம் என்பவை தொடர்பான சாட்சியங்களைத் தொகுத்தல். இரண்டாவது இலங்கையில் ஐ.நா கண்காணிப்பாளரை நிறுத்துதல். அந்த இரண்டும் நடைமுறையில் பெரிய பயன்களைத் தரும் எனக் கூற முடியாது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-14#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48