கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகு­தி­களில் வைத்து வெள்ளை வேன்­களில் கடத்திச் செல்­லப்பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்­தல்கள் மற்றும் மேலும் பல கடத்­தல்கள் குறித்த விசா­ர­ணை­களின் பிர­தான சாட்­சி­யா­ள­ராக கரு­தப்­படும் லெப்­டினன் கொமாண்டர் கே.பி. வெல­கெ­தர

தொடர்ச்­சி­யான கொலை அச்­சு­றுத்­த­லுக்கு முகம் கொடுத்­துள்ளார். இது குறித்து வெல­கெ­த­ரவின் பெற்றோர் ஊடாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­கா­ரி­யான பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த சில்­வா­வுக்கும் அறி­விக்­கப்பட்டும் அவ்­வச்­சு­றுத்­த­ல் தொடர்­வ­தாக கடற்­படை தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து கிடைக்கும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

ஏற்­க­னவே அறி­விக்­காமல் அவுஸ்தி­ரே­லியா சென்­ற­தாக கூறி கடற்­ப­டையின் இரா­ணுவ நீதி­மன்றம் வெல­கெ­த­ர­வுக்கு அவ­ரது சிரேஷ்­டத்­து­வத்தை நான்கு வரு­டங்­களால் குறைத்து தீர்ப்­ப­றி­வித்­தது. எனினும் பாது­காப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனா­தி­பதி அத்­தீர்ப்பில் கையெ­ழுத்­தி­டாது அத்­தண்­ட­னையை ரத்து செய்தார். அத்­துடன் சாட்­சிகள் பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் கீழ் வெல­கெ­த­ர­வுக்கு பாது­காப்­ப­ளிக்­கவும் ஜனா­தி­பதி உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார்.

தனிப்­பட்ட ரீதி­யாக லெப்­டினன் கொமாண்டர் வெல்­கெ­த­ர­வுக்கு பாது­காப்­ப­ளிக்க விடுக்கப்­பட்ட உத்­த­ர­வா­னது நேற்று வரை செயற்­ப­டுத்­தப்­ப­டாமை கார­ண­மாக அவ­ருக்கு இந்த உயிர் அச்­சு­றுத்தல் தொடர்­கின்­றது.

கடந்த 2008.09.17 அன்று இரவு தெஹி­வளை, பெர்­னாண்டோ மாவத்­தையில் வைத்து ரஜீவ் நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஷ்­வரம் ராம­லிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாண­வர்­களும், கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆரச்சி, திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த கன­க­ராஜா ஜெகன், தெஹி­வ­ளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகிய 11 பேர் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இது குறித்து குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் புல­னாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரி­வுக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சானி அபே­சே­க­ரவின் ஆலோ­ச­னைக்கு அமைய குறித்த பிரிவின் பொறுப்­ப­தி­காரி நிஸாந்த டீ சில்வா தலை­மை­யி­லான விசா­ரணைக் குழு­வினர் பல்­வேறு கோணங்களில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். அதில் இவ்­வாறு கடத்­தப்­பட்­ட­வர்கள் கொழும்பு சைத்­திய வீதியில் உள்ள புட்டு பம்பு எனும் ரக­சிய தடுப்பு இடத்­திலும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தின் கன்சைட் எனும் இர­க­சிய நிலத்­தடி சிறைக் கூடத்­திலும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ள­மைக்­கான அறிகுறிகள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.

இந்த விவ­கா­ரத்தில் கன்சைட் நிலத்­தடி இர­க­சிய முகாம் அருகே சேவை­யாற்­றிய லெப்­டினன் கொமாண்டர் வெல­கெ­தர புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்கிய வாக்கு மூலம் விசா­ர­ணையில் பாரிய தாக்கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந் நிலை­யி­லேயே அவ­ருக்கு எதி­ரான உயிர் அச்­சு­றுத்தல் அதி­க­ரித்­துள்­ளது. அவ­ரது சாட்சி ஆவ­ணங்கள் அடங்­கிய அலு­மா­ரியும் உடைக்­கப்பட்டு அதி­லி­ருந்த ஆவ­ணங்கள் கடற்­ப­டைக்­குள்­ளேயே கொள்­ளை­யி­டப்பட்­டுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது.

இந் நிலையில் லெப்­டினன் கொமாண்டர் சி.கே.வெல்­கெ­தர என்ற சாட்­சி­யா­ளரின் பாது­காப்பு குறித்து கேசரி கடற்­ப­டையின் பேச்­சாளர் கெப்டன் அக்ரம் அல­வி­யிடம் வின­வி­யபோது,

இதற்கு பதி­ல­ளித்த கடற்­படை பேச்­சாளர் கெப்டன் அக்ரம் அலவி,

கொமாண்டர் சி.கே.வெல்­கெ­தர வின் பாது­க­ாப்­புக்கு அச்­சு­றுத்தல் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை. அவர் கடற்­படை முகா­முக்­குள்­ளேயே இருப்­பதால் அவரை யாரும் எதுவும் செய்­து­விட முடி­யாது. என்றார்.

இதன்­போது கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­விடம் அண்­மையில் சி.ஐ.டி. முன்­வைத்த அறிக்­கையில் வெல்­கெ­த­ர­வுக்கு உயிர் அச்­சு­றுத்தல் உள்­ள­தாக கூறப்பட்­டுள்­ளதே என கேட்டபோது

இதற்கு பதி­ல­ளித்த அவர், கெப்டன் வெல்­கெ­த­ர­வுக்கு சுதந்­தி­ர­மாக செயற்­பட முடியும். அவ­ருக்கு அச்­சு­றுத்­தல்கள் ஏதும் இருப்பின் அவர் மனித உரி­மைகள் மீறல் தொடர்பில் வழக்கு கூட தாக்கல் செய்ய முடியும். அவர் சாட்­சி­யா­ள­ராக செயற்­பட அவ­ருக்கு பூரண உரிமை உள்­ளது. தற்­போ­தைக்கு அவர் முக­ாமுக்குள் இருப்­பதால் அவ­ருக்கு அது பாது­காப்­ப­னதே. என்றார்.