கிராண்ட்பாஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து

Published By: Vishnu

15 Mar, 2021 | 02:58 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு - தொட்டலங்க பிரதேசத்தில் ஹேனமுல்ல ஒழுங்கையில் அமைந்துள்ள கஜிமாவத்தை பகுதியில் ஏற்பட்ட தீடீர் தீப்பரவலில் சுமார் 40 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. 

இன்று அதிகாலை 2.30 மணியளவில் இத் தீவிபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்தினால் 40 வீடுகளிலுமுள்ள சொத்துக்கள் அனைத்தும் முழுமையாக சேதமடைந்துள்ளன. எனினும் உயிரிழப்புக்கள் எவையும் ஏற்படாத அதேவேளை, யாரும் காயங்களுக்கும் உள்ளாகாமல் பொலிஸார் , இராணுவம் மற்றும் தீயணைப்பு பிரிவினரால் காப்பற்றப்பட்டுள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் குறித்து கண்டறிவதற்காக அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர். 

அத்தோடு தீ விபத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கான உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை செய்து கொடுப்பதற்காக இராணுவத்தினர் , கடற்படை மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வீடுகள் அனைத்தும் பலகைகளால் அமைக்கப்பட்டிருந்தமையால் கட்டுப்படுத்த முடியாதளவிற்கு தீ மிக வேகமாகப் பரவியதாகவும் , அதனால் தமது உடைமைகள் எவற்றையும் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் போனதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப்...

2025-11-07 18:42:07
news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43