நவீன உலகிற்கு பொருந்தும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும்  - ஜி.எல். பீரிஸ்

Published By: Digital Desk 4

15 Mar, 2021 | 06:18 AM
image

(இராஜதுரை ஹஷான்)

இலவச கல்வி துறையில் தற்போது அமுலிலுள்ள பாடத்திட்டத்தில் உள்ளடக்கியுள்ள விடயங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கும் ஏற்புடையதல்ல.

புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை ஊடாக நவீன உலகிற்கு பொருந்தும் வகையில் பாடத்த்திட்டத்தை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

மாத்தறை ராஹூல மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய பாடசாலைகளுக்கு விஜயம் செய்த பின்னர் கல்வியலாளர்களுடன் கலந்துரையாடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலவச கல்வியினை கற்கும் மாணவர்கள் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதில் பாரிய போராட்டம் நிலவுகிறது. பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் வெளியேறிய பின்னர் அனைத்து பட்டதாரிகளுக்கும் அரச தொழிற்துறையினை பெற்றுக் கொடுப்பதில் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சிக்கல் நிலை காணப்படுகிறது.

தற்போது அலுலில் உள்ள பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயதானங்கள் நாட்டின் பொருளாதார முன்னெற்றத்திற்கும், தொழில் வாய்ப்புக்களை இலகுவில் பெற்றுக் கொள்வதற்கும்  சாதகமான அமையவில்லை மாறாக சிக்கல் தன்மையினை மாத்திரம் ஏற்படுத்தியுள்ளன.

பாடசாலை பாடத்திட்டங்கள் மட்டுமல்ல பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் கூட தற்போதைய சவால்மிக்க உலகில் இலகுவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு சாதகமாக அமையவில்லை.புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஊடாக பாடத்திட்டத்தை புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக தகவல்,கணனி,ஆங்கிலம் ஆகிய கற்றை நெறிகளை பிரதான பாடத்திட்டங்களாக உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தில் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இடம் பெறவுள்ளது.

இலவச கல்வி சேவையினை  செயற்படுத்தினால் மாத்திரம் போதாது. இலவச கல்வியின் உச்ச பயனை பயனாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.இலவச கல்வி குறித்து சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் குறுகிய காலத்தில் செயற்படுத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் உறைபனி பொழிவு: மக்களின் இயல்பு...

2026-01-24 11:16:06
news-image

இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் வெனிசுலா வெளிவிவகார...

2026-01-24 10:54:27
news-image

யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில்...

2026-01-24 10:40:30
news-image

கொஹுவலை கொலை சம்பவம் ; பொலிஸாரால்...

2026-01-24 10:20:59
news-image

கல்லடி பாலத்தில் இருந்து குதித்து யுவதி...

2026-01-24 10:20:01
news-image

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான யுத்தகால பாலியல்...

2026-01-24 10:03:06
news-image

துப்பாக்கியுடன் காரை கைவிட்டு தப்பிச் சென்றவர்கள்...

2026-01-24 09:53:42
news-image

மட்டக்களப்பு இளைஞர்கள் இருவர் விபத்தில் சிக்கி...

2026-01-24 09:44:42
news-image

ஹிரிகெட்டிய கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை...

2026-01-24 09:22:09
news-image

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி...

2026-01-24 09:21:06
news-image

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கர்ப்பப்பை...

2026-01-24 09:10:46
news-image

இலங்கை கடற்பரப்பில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-01-24 08:39:47