ஜெனிவா கிளறிய மோதல்கள்

By Gayathri

15 Mar, 2021 | 06:16 AM
image

-கபில்

“ஜெனிவா விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே உள்ளக மோதல் நடக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே இன்னொரு சுற்று மோதல் தொடங்கியிருக்கிறது”

"மூன்று தமிழ்க் கட்சிகள் இணைந்து எழுத்துமூல கோரிக்கை விட்டதன் பின்னர் வெளியான ஜெனிவா வெளியிடுவதில் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறானது தான் வெளியாகியுள்ள வரைவு."

வழக்கத்தில் ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர்தான், தமிழ்க் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக்கொள்ளும். அந்தப் பிடுங்குப்பாடுகள் இந்த முறை முன்கூட்டியே தொடங்கி விட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயும் உள்ளக மோதல் நடக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயும் இன்னொரு சுற்று மோதல் தொடங்கியிருக்கிறது.

ஜெனிவா கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னிறுத்தியே இந்த அக்கப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை பிரித்தானியா முன்வைக்கவுள்ளது என்ற தகவல் கசிந்த பின்னர், மேற்குலக நாடுகள் கொடுத்த சமிக்ஞையை அப்படியே விழுங்கிக்கொண்டு, பிரதான தமிழ்க் கட்சிகள், சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு கோரிக்கை மனுவை அனுசரணை நாடுகளுக்கு அனுப்பியிருந்தன.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் அம்மையார் வெளியிட்ட அறிக்கையும், தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட பல விடயங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ளடக்கியிருந்தன.

சர்வதேச விசாரணை, போர்க்குற்ற சாட்சியங்கள், ஆதாரங்களை சேகரித்து ஆவணப்படுத்தி பாதுகாக்கின்ற பொறிமுறை, நம்பகமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளவர்கள் மீதான பயணத் தடைகள், சொத்துக்கள் முடக்கம், போன்ற விடயங்களும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

அதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட எல்லாத் தரப்புகளும் விழுந்தடித்துக்கொண்டு வரவேற்றன. ஆனால், ஜெனிவாவில் முன்வைக்கப்படும் தீர்மான வரைவு இவை எல்லாவற்றுக்கும் எதிர்மாறானதாகவே இருந்தது.

சாட்சியங்கள், ஆதாரங்களைச் சேகரித்து ஆவணப்படுத்தி பாதுகாக்கும் கட்டமைப்பை உருவாக்குதலைத் தவிர, வேறெந்த உருப்படியான விடயமும் அதில் இல்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-14#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right