பாவனைக்குதவாத 600 கிலோ தேயிலை மீட்பு 

Published By: J.G.Stephan

14 Mar, 2021 | 04:42 PM
image

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள மாமாங்கம் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மனித பாவனைக்குதவாத தேயிலை தூள்களை விற்பனை செய்த  ஒருவரை நேற்று சனிக்கிழமை (13.03.2021)கைது செய்ததுடன்,  600 கிலோ தேயிலைத் தூள்களையும் மீட்டுள்ளதாக மாவட்ட குற்றவியல் விசாரணைப்பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மாமாங்கம் பிரதேசத்திலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்து சோதனையிலீடுபட்டபோதே, அனுமதிப்பத்திரமின்றி சிலோன் தேயிலை என்ற பெயரில் மனித பாவனைக்குதவாத தேயிலை தூள்களை விற்பனை செய்து வந்த ஒருவரை கைது செய்ததுடன், அங்கிருந்து 600 கிலோ கிராம் தேயிலைத் தூள்களை மீட்டுள்ளனர்.

குறித்த தேயிலைத்தூளை எங்கிருந்து கொள்வனவு செய்யப்பட்டதென்பது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கைப்பற்றப்பட்ட தேயிலைத் தூளின் மாதிரி கொழும்புக்கு பகுப்பாய்வுக்கு அனுப்பவுள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர். 


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:55:16
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00