கொவிட்-19 பரவல்  அச்சம் காரணமாக பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிளுக்கு 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க ஜப்பான் பரிசீலித்து வருவதாக சங்கீ செய்தித்தாள் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பெரிய அரங்குகளில் பார்வையாளர்களின் அதிகூடிய எண்ணிக்கை 20 ஆயிரமாக நிர்ணயிக்கப்படலாம். 

எனினும் தொற்று நிலைமை கட்டுப்பாடு மேலும் முன்னேற்றம் அளித்தால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் சாங்கீ தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வமான முடிவினை ஜப்பானின் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு அடுத்த மாதம் அறிவிக்கும்.

புதிய கொரோனா வைரஸ் பரவுவது குறித்த கவலைகள் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகள் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டு, 2021 ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை மாற்றியமைக்கப்பட்டன.

கொவிட்-19 பரவுவது குறித்த கவலைகள் காரணமாக வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டுகளை நடத்த ஜப்பான் முன்னதாக முடிவு செய்துள்ளது.

ஆனால் அது தொடர்பில் எந்தவொரு உறுதியான முடிவும் எட்டப்படவில்லை என்று அமைப்புக் குழுத் தலைவர் சீகோ ஹாஷிமோடோ தெரிவித்துள்ளார்.