(செ.தேன்மொழி)
நாட்டில் சில பிரதேசங்களில் வீதி விபத்துகளினால் இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வீதி விபத்துகளினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 7 பேர் நேற்று இடம்பெற்ற விபத்துகளில் உயிரிழந்துள்ளதுடன், எஞ்சிய 5 பேரும் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்தவர்களாவர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் , பாதசாரிகள் நால்வர் உட்பட முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களில் பயணித்த ஐந்து பேருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
வீதி விபத்துக்களினால் கடந்த காலங்களில் நாளொன்றுக்கு சுமார் 6 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது நாளொன்றுக்கு 12 -15 பேர் விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.
இது கவலைக்கிடமான நிலைமையாகும். வீதி விபத்துகளினால் இடம்பெறும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொலிஸார் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்ற போதிலும் , மக்கள் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினாலே அதனை கட்டுப்படுத்த முடியும்.
எனவே வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் வீதி ஒழுங்க சட்டவிதிகளை கடைப்பிடிப்பதுடன் , எப்போதுமே கவனத்துடன் செயற்பட வேண்டும். தற்போது மழையுடனான காலநிலை நிலவுவதனால் அது தொடர்பிலும் கவனம் செலுத்தி விபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கு வாகன சாரதிகள் முயற்சிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM