நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் வீதி விபத்துக்களில் சிக்கிய 12 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ஏழு பேரும், அதற்கு முன்னர் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் சிக்கிய மேலும் ஐந்து பேருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

தற்சமயம் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால், வாகன சாரதிகள் போக்குவரத்து சட்டங்களை அவசியம் கடைபிடித்து வாகனங்களை செலுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.