இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 526 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா மரணமொன்று இன்று (13.03.2021) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, நாட்டில் மேலும் 179 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், இலங்கையில் அடையாளங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 87 ,286 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 295 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,253ஆக அதிகரித்துள்ளது.