சுபீட்சத்தின் நோக்கு என்ற அரசின் வேலைத்திட்டத்திற்கமைய வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டாகுளம், வினாசிகுளம் இடையேயான பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13.03.2021) இடம்பெற்றது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தான் பாலத்திற்கான அடிக்கல்லை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த பாலம் சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான தொகையில் அமைக்கப்படவுள்ளதுடன், இதன் மூலம் அந்த பகுதியால் பயணம் செய்யும் 5 ற்கும் மேற்பட்ட கிராமமக்கள் பலனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் இ.தணிகாசலம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் குருஸ், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திரா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான பார்த்தீபன், சுதா, பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.