திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் சீனி ஆலை காட்டுப் பகுதியில் காட்டு யானையொன்று இறந்த நிலையில் வன வல ஜீவராசி  அதிகாரிகளினால் இன்று (13.03.2021) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் சீனி ஆலை காட்டுப் பகுதியில் மாடு மேய்க்கச்  சென்றவர்களினால் வழங்கபட்ட தகவலுக்கமைய இறந்த காட்டு யானையை வன ஜீவராசி அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது. 

இருபது வயதுடைய காட்டு யானையொன்றே உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வன ஜீவராசி அதிகாரிகளினால் நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளதா அல்லது ஏதாவது காயங்கள் காரணமாக இறந்துள்ளதா போன்ற  பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.