மீண்டும் சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் : பாராளுமன்றம் செல்ல தயாராகிறார் ரணில்

Published By: J.G.Stephan

13 Mar, 2021 | 05:59 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)



* முக்கிய தலைவர்களுடன் மைத்திரி மந்திராலோசனை

* ரவி , நவீன், அர்ஜுன , கரு , மங்கள ஆகியோரும் களத்தில்

ஐக்கிய தேசிய கட்சியின்  தலைமைத்துவம் தற்போது நாட்டிற்கு அத்தியாவசியமானதாகியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமல்ல ஆளும் கட்சியிலிருந்தும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.

எனவே நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டும் நாட்டின் தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டும் சாதகமான தீர்மானத்தை எடுத்துள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  



இதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளவுள்ளார்.

கடந்த  பொதுத்தேர்தல்களில் பின்னடைவுகளை சந்தித்திருந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு தேசிய பட்டியல் ஆசனமே உரித்தானது.

இந்த தேசிய பட்டியல் ஆசனத்தில் யார் பாராளுமன்றம் செல்வது என்ற இழுபறி நிலை மிக நீண்ட காலமாக காணப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் பலரினதும் வேண்டுக்கோளுக்கிணங்கி தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திற்குள் மீண்டும் வலுவானதொரு எதிர்க்கட்சி  உருவாக்குவது குறித்து பாராளுமன்ற உறுப்பினரான ராஜித சேனாரத்ன தலைமையிலான குழுவினர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

அதேபோன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்களும் ரணிலை  சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

கட்சி பதவிகளில் ஏற்பட்ட சர்ச்சையால் விரிசல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த ரவி கருணாநாயக்க , நவீன் திசாநாயக மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோரும் கடந்த புதன் கிழமை சிறிகொத்தாவில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

அத்துடன் முன்னாள் சபாநாயகரும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவருமான கரு ஜயசூரியவும் கடந்த புதன்கிழமை ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.

அடுத்து வரும் தேர்ல்களை மையப்படுத்திய  ஐக்கிய தேசிய கட்சியை வலுப்படுத்துடன் ஏனைய கட்சிகளையும் இணைத்து அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பில் முக்கிய தலைவர்கள் மத்தியில் பேச்சு வார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவே குறிப்பிடப்படுகின்றது.

மறுப்புறம் ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட தொடங்கியுள்ளது. கட்சிக்குள் தீர்மானங்கள் எடுக்கும் போது அதில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் நெருக்கமானவர்கள் தலையீடு செய்வதே இந்த முரண்பாடுகளுக்கு காரணமாகியுள்ளதாக முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

அது மாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனக்கு மிக நெருக்கமான குறிப்பிட்ட சில தலைவர்களை அழைத்து கலந்துரையாடியுள்ளார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில் ஆளும் கட்சிக்குள் மேலோங்கியுள்ள சுதந்திர கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் ஆணைக்குழு அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21