இலங்கையில் வஹாப் மற்றும் ஜிஹாத் கொள்கைகளை பரப்பிய குற்றச்சாட்டில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித்ரோஹண தெரிவித்தார்.

மாவனெல்ல, முருத்தவளை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஜமாத் -இ -இஸ்லாமி (Jamaat-e-Islami) அமைப்பின் முன்னாள் தலைவர் ரஷீட் ஹஜ்ஜுல் அக்பர் (Rasheed Hajjul Akbar) என்பவரே இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொழும்பு, தெமட்டகொடை  பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரின் நெருங்கிய உறவினர் என்பதுடன் ஜமாத் - இ- இஸ்லாமி அமைப்பின் வெளியீடுகளில் வஹாபிசம் மற்றும் ஜிகாத் கொள்கைகளை ஊக்குவிக்கும் கட்டுரைகளை எழுதி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.