விமல் வீரவன்ச பொறுப்புடன் கருத்துரைக்க  வேண்டும் - ஆளுங்கட்சிக்குள்ளிருந்து எச்சரிக்கை !

13 Mar, 2021 | 05:45 AM
image

(இராஜதுரை ஹஷான்)

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையினையுடையவர்கள் எவரும் அரசாங்கத்தில் கிடையாது. 

கைத்தொழில் வளங்கள் அமைச்சர் விமல் வீரவன்ச பொறுப்புடன் கருத்துரைக்க  வேண்டும். 

முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்துக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையினை உடையவர்களை அரசாங்கத்தில் ஒருபோதும் இணைத்துக் கொள்ளமாட்டோம் என்பது பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கையாக காணப்பட்டது.

அடிப்படைவாதிகளுடன் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க கூடாது என்பதற்காகவே நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி தனித்த அரசாங்கத்தை அமைத்துள்ளார்கள்.

நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைத்தூக்க முடியாத அளவிற்கு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்து. 

அரசாங்கத்திற்குள் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையினையுடையவர்கள் உள்ளார்கள் என கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ள கருத்து முற்றிலும் தவறாகும். 

அடிப்படைவாத கொள்கையினை கொண்டவர்களை உள்ளடக்கி ஆட்சியமைக்கவில்லை.

முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்துக்கள் அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும்.

ஆகவே அரசாங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்படுதல் அவசியமாகும். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை  பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

கறுப்பு ஞாயிறுதின போராட்டம் தொடர்பில் தற்போது கருத்துரைக்கும் எதிர்தரப்பினர் கடந்த கால நிகழ்வுகளை மறந்து விட்டார்கள்.

கடந்த அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க உரிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் முன்னெடுத்திருந்தால் தற்போது கறுப்பு ஞாயிறு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதேவை எற்பட்டிருக்காது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான அறிக்கையில் ஒரு சிலகுறைபாடுகள் காணப்படுகின்றன. 

குறைப்பாடுகள் பரிசீலனை செய்யப்படுகின்றன.அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல யோசனைகள். இனிவரும் காலங்களில் முறையாக செயற்படுத்தப்படும்.என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05