கொவிட் 19 தொற்று காரணமாக  இன்று 05 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிசெய்துள்ளதுடன், அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், அக்கரைப்பற்று பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், அக்கரைப்பற்று  ஆதார வைத்தியசாலையில் இருந்து கொவிட் தொற்று கண்டறியப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கும், பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மார்ச் மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, சுவாசத்தொகுதி தொற்று, கொவிட் நியூமோனியா மற்றும் தீவிர சிறுநீரக தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மொரட்டுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு  போதனா வைத்தியசாலையில் இருந்து கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மார்ச் மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

குருதி நஞ்சானமை, கொவிட் தொற்று மற்றும் தீவிர சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வத்தளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், வடகொழும்பு போதனா வைத்தியசாலையில் இருந்து கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மார்ச் மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமை, பல உறுப்புக்கள் செயலிழந்தமை மற்றும் கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

றாகம வல்பொல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு  தேசிய வைத்தியசாலையில் இருந்து கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மார்ச் மாதம் 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

கொவிட் நியூமோனியா மற்றும் குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சியே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் இருந்து கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மார்ச் மாதம் 12 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இதயநோய், தீவிர சிறுநீரக நோய், கொவிட் நியூமோனியா மற்றும் தீவிர சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.