(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பல்வேறு தடை செய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
05 கையடக்க தொலைபேசிகள் ,14 சிம் அட்டைகள், கையடக்க தொலைபேசிக்கான 03 மின்னேற்றிகள், கத்தரிக் கோள்கள் இரண்டு, 28 போதைப் பொருள் பக்கட்டுக்கள், ஹெரோயின் என நம்பப்படும் ஒரு வகை தூள் அடங்கிய டப்பா, புகையிலைத் துண்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலைகள் ஆணையாளர் ( நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க கூறினார்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் அத்தியட்சகரின் கோரிக்கைக்கு அமைய, கடமையில் உள்ள பொலிஸ் விஷேட அதிரடிப் படை மற்றும் வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் சிறை ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்து இந்த திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM