(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணி வரை 115 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 87 104 ஆக அதிகரித்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 83 958 பேர் குணமடைந்துள்ளதோடு , 2626 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளது.

நாவலப்பிட்டியை சேர்ந்த 56 வயதுடைய பெண்னொருவர் தெல்தெலனிய ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

அங்குலானையைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்னொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 9 ஆம் திகதி கொவிட் தொற்று , இதய நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

மத்தேகொடையை சேர்ந்த 67 வயதுடைய பெண்னொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

பிபில பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் கடந்த 11 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.