பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரை கத்தரிக்கோல் மற்றும் பிளேட் கத்தி போன்றவற்றைக் கொண்டு குறித்த சந்தேக நபர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வகுப்பை நடாத்த தயாராகிக்கொண்டிருந்த போதே ஆசிரியரின் விலா மற்றும் தொண்டையில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆசிரியருக்கு உயிராபத்து இல்லை எனவும் குறித்த சந்தேக நபரை  பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை நடத்திய போது, தான் இஸ்லாமிய அரசு குழுவை சேர்ந்தவர் என்றும் இது இஸ்லாமிய அரசு. இது ஒரு எச்சரிக்கை என்றும் அந்த நபர் கூறியதாக கூறப்படுகின்றது.