" மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும் "

Published By: Digital Desk 3

12 Mar, 2021 | 12:38 PM
image

(நா.தனுஜா)

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான தூதுவர்கள் ஒன்றிணைந்து வலியுறுத்தியுள்ளனர்.

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்ச்சியாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த எட்டு நாடுகளிலுள்ள மனித உரிமை தூதுவர்கள் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கைதுசெய்யப்பட்டு, தொடர்ச்சியாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை பெரிதும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 10 மாதகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர், தற்போது ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது அவரால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைவாழ் முஸ்லிம்கள் உள்ளடங்கலாக சிறுபான்மை சமூகத்தவரின் உரிமைகளுக்காகவும் பிரிவினைக் கொள்கைகளுக்கு எதிராகவும்  முன்நின்று செயற்பட்டவர்களில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா முக்கியமானவராவார்.

நாடொன்றில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும். எனவே மனித உரிமை செயற்பாட்டாளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாட்டை ஏற்பதுடன், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57
news-image

நீர்கொழும்பு களப்பைப் பாதுகாத்து சுற்றுலா ஈர்ப்பை...

2026-02-17 17:14:26
news-image

மூதூரில் டிப்பர் வாகனத்தில் கட்டாக்காலி மாடு...

2026-02-17 17:01:19
news-image

இலங்கை மற்றும் ஜப்பான் இடையே பொருளாதார...

2026-02-17 16:44:37
news-image

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ; கொழும்பில்...

2026-02-17 16:14:10