விக்ரமுடன் இணையும் சந்தோஷ் நாராயணன்

By Gayathri

12 Mar, 2021 | 12:30 PM
image

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக ‘தமிழ் திரை உலகின் ராசியான நடிகை’ என பெயர் பெற்றிருக்கும் நடிகை வாணிபோஜன் நடிப்பதுடன், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

'ஜகமே தந்திரம்' என்ற படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். 

இப்படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக 'ஓ மை கடவுளே: பட புகழ் நடிகை வாணி போஜன் நடிக்கிறார். 

மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் மூத்த நடிகை சிம்ரன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 

இப்படத்தின் இசையமைப்பாளராக பணியாற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகிவரும் 'பொன்னியின் செல்வன்' மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் 'கோப்ரா' ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகர் விக்ரம், இவ்விரு படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்து விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிக்கவிருக்கிறார்.

சீயான் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், சந்தோஷ் நாராயணன், கார்த்திக் சுப்புராஜ் என்ற வித்தியாசமான கூட்டணி அமைந்திருப்பதால் ‘சீயான் 60’ என்ற இந்த படத்திற்கு தற்போதே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right