ஆனமடுவ - நவகத்தேகம வீதியின் இலங்கை மின்சார சபைக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனமடுவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

நவகத்தேகம பிரதேசத்தில் இருந்து ஆனமடுவ பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியில் நடந்து சென்ற நபர் மீது மோதியமையினாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதனால் காயமடைந்த பாதசாரி ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.