இலங்கை அகதிகள் படகுகள் மூலம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதாக தகவல் தெரிந்தால் உடனடியாக அவசர அழைப்பு 1093 எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பொலிஸார் கோரியுள்ளனர்.  

இதேவேளை, மீனவர்கள் கண்டிப்பாக லைப் ஜாக்கெட் அணிந்து செல்ல வேண்டும், அனைத்து படகுகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும், இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்கச் செல்லக்கூடாது மற்றும் மீன்பிடிக்க போகும்போது கண்டிப்பாக அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் பொலிஸார் மீனவர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.