சர்வசே ஒலிம்பிக் குழுவின் தலைவராக ஜேர்மனியைச் சேர்ந்த சட்டத்தரணியான தோமஸ் பக் (Thomas Bach) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

No description available.

67 வயதான தோமஸ் பக் (Thomas Bach) வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த வாக்கெடுப்பு இணையவழி (ஒன்லைன்) மூலம் நடத்தப்பட்டது.

இவ்வாறு மீண்டும் சர்வசே ஒலிம்பிக் குழுவின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தோமஸ் பக் (Thomas Bach) எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார்.

தான் தெரிவு செய்யப்படுவதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள தோமஸ் பக், கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பிக்கும் என உறுதியாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.